நபர் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுப்பிய மனைவி மீது வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியிலுள்ள Konya என்ற பகுதியில் வசித்து வரும் 23 வயதுள்ள பெண் Rukiya Ay. இவரது கணவர் Ali ay. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென Rukiya உடல் முழுவதும் வெந்து போன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து Rukiya கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, சம்பவத்தன்று என் கணவருக்கு மிகவும் பிடித்த காலை உணவுகளை சமைத்து வைத்திருந்தேன். இதனால் அவரை எழுப்பினேன். கண் விழித்து பார்த்ததும் அவர் ஆச்சரியப்படுவார் என்று நினைத்தேன்.
ஆனால் மாறாக அவர் மிகவும் ஆத்திரமடைந்தார். மேலும் தேவையில்லாமல் எதற்காக என்னை எழுப்பினாய் என்று கத்தினார். மேலும் என்னைப் பற்றி நீ கவலைப்பட தேவையில்லை என்று கூறியதால் என் மகளுடன் நான் காலை உணவை எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு சிறிது நேரத்தில் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த என் கணவர் என்னை விவாகரத்து செய்யப்போவதாக கூறினார். இதனைத்தொடர்ந்து கொதிக்கும் நீரையும் என் மீது ஊற்றினார். அப்போது அதிர்ஷ்டவசமாக முகத்தில் படாமல் தப்பினேன். மேலும் அந்த தாக்குதலிலிருந்து தப்ப முயன்றபோது சுயநினைவின்றி கீழே விழுந்தேன்.
அதன் பிறகு நான் கண் விழிக்கும்போது அவர் என் கூந்தலை பிடித்து இழுத்து சென்றார். அப்போது அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதனால் அங்கிருந்து தப்பி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் உடனடியாக என் கணவரை கைது செய்தனர் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சிறையிலிருந்து அவர் வெளியேறியதால் பொதுமக்கள் கடுமையாக கொந்தளித்தனர். இதனால் Ali மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் Rukiya கூறுகையில் Ali வெளியே வந்தால் எனக்கும் என் மகளுக்கும் பெரிய ஆபத்து ஏற்படபோவது உறுதி என்று கூறியுள்ளார்.