Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் மனோஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு மனோஜ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் மனோஜ் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன பிறகும் அவருக்கு குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனோஜ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |