பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சடையார்கோவில் பகுதியில் சிகாமணி-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ரம்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.