தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட நந்தமுரி பாலகிருஷ்ணாவின் செயல் விவகாரமாகியுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்து நடித்து வருகின்றார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்குவது, அரசியல்வாதி என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். அண்மைய காலங்களில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த நிலையில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் இந்துபூர் பகுதியில் ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயன்றனர்.
Poor thing 😬 This man 🤦♂️
— Haricharan Pudipeddi (@pudiharicharan) June 2, 2022
அப்போது ரசிகர் ஒருவர் தனது குழந்தையுடன் வந்துள்ளார். அந்த குழந்தை தனது அப்பாவின் தோளில் சாய்ந்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த நந்தமூரி பாலகிருஷ்ணா குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ அந்த குழந்தைக்கு நீங்கள் யார் என்றே தெரியாது. குழந்தையிடம் போய் இப்படி நடந்து கொள்வதா என கேள்வி கேட்டு வருகின்றனர்.