வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகிலுள்ள பிள்ளை தோப்பு பகுதியில் சைமன்- அற்புதம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள்கள் இருக்கின்றனர் இதில் சைமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அற்புதம் தனது மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிலிருந்த செல்போன்கள் மற்றும் ரூபாய் 2000 பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கடந்த 2-ஆம் தேதி வெள்ளி ச்சந்தை காவல்நிலையத்தில் அற்புதம் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் கீழமட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.