Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே…. நகை & பணத்தை ஆட்டய போட்ட….. திருடர்களை தேடும் போலீசார்…!!

வீட்டில் தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் வசிப்பவர் திருநாவுக்கரசு (43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். இவரின் குழந்தை தூங்கும் சமயத்தில் அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்துள்ளனர். இதையடுத்து மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்ததால் அவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்த பீரோ அலமாரியை உடைத்து அதிலிருந்த பைகள் மற்றும் நகை பெட்டிகளை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று பைகளில் இருந்த 9 பவுன் நகை மற்றும் 25,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலையில் எழுந்த திருநாவுக்கரசு மற்றும் அவரின் குடும்பத்தினர் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி அங்கிருந்த கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர். மேலும் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை கண்டுபிடிக்க சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |