Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

காலையில் கண்விழ்த்து பார்த்த குடும்பத்தினர் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிவப்பிரகாசம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |