வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில் விவசாயியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னதுரை தனது குடும்பத்தினருடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சின்னதுரை உடனடியாக தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து விட்டார்.
பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் எரிந்த தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.