அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த போது பனிக்குல்லா அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் தேவகியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது கண்விழித்த தேவகி சத்தம் போட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் வெங்கடேசனை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.