தூங்கி கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி மேட்டுத்தெருவில் செய்யது சுலைமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செய்யது சுலைமான் சவுதி அரேபியாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் மது அருந்திவிட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென அவரது காதிலிருந்து ரத்தம் வழிந்து மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்துக்கு நடந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செய்யது சுலைமானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.