Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது தீ வைத்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் தொழிலாளியின் குடிசைக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் குடிசைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் குடிசை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜா கதவை உடைத்து தனது மனைவி மற்றும் மகன்களுடன் பத்திரமாக வெளியேறி தீயை அணைக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள் குடிசை முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மோட்டார் சைக்கிள், ஆவணங்கள் போன்றவை எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |