மகன் தாய் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இவரது மகனான விஜயகுமார் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் விஜயகுமார் ஜெயாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, சொத்தை பிரித்து தரவில்லை என கூறி தகராறு செய்துள்ளார்.
இதனை அடுத்து ஜெயா தூங்கிகொண்டிருந்த போது விஜயகுமார் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.