சிலிண்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் ரீட்டா நகரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மாள் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென கியாஸ் வாசனை வருவதை உணர்ந்த மாரியம்மாள் எழுந்து பார்த்த போது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.