பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முருகேசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று உள்ளே புகுந்து முருகேசனை கடித்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.