Categories
தேசிய செய்திகள்

தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….. சோகம்…..!!!!

தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏசி வடித்து தாயும் மகளும் உயிரிழந்த நிலையில் தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரோலில் உள்ள வீட்டில் ஏசி விடுத்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பை லோயர் பரோலில் உள்ள இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது . உயிரிழந்தவர் லட்சுமி ரத்தோரின் மகள் மது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லட்சுமியின் கணவர் மற்றும் மகனாகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த கோடைகாலத்தின் போது சமீபத்தில் தான் வீட்டிற்கு புதிய ஏசியை அவர்கள் வாங்கியுள்ளனர். புதிய ஏசி வாங்கி வந்ததாகவும் வயரிங் பிரச்சனை இருப்பதாகவும் தினேஷ் கூறியதாக தேஜாபாயின் மருமகன் சுரேஷ் கூறியுள்ளார். திடீரென ஏற்பட்ட தீயின் புகையை சுவாசித்த லட்சுமி மயக்கமடைந்தார். சிகிச்சை இடையே அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மகள் மது எண்பது சதவீதம் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். தந்தைக்கும் மகனுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |