வடமாநில வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாணிப கழக வளாகத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் லாரியின் மேல் ஏறி தூங்குவது வழக்கம். வழக்கம்போல சந்தீப் சிங் மது அருந்திவிட்டு தூங்குவதற்காக லாரியில் ஏறியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சந்தீப் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.