போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியல் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓமனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த சஜித் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சஜித் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சஜித் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சஜித்தை பரிசோதித்து பார்த்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சஜித் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.