Categories
தேசிய செய்திகள்

“தூங்க விடலனா தற்கொலை பண்ணிக்குவேன்”… நள்ளிரவில் பெண்ணிடம் தகராறு செய்த காவலர்…!!

ராஜஸ்தானில் காவலர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த நரேஷ் குமார் என்பவர் தனக்கு தெரிந்த பெண் ஒருவருடன் இணைந்து யோகா மையம் நடத்தி வருகிறார். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தனது பங்கை பிரித்து கொடுக்குமாறு அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் நிரப்பப்படாத காசோலையை கொடுத்து பணத்தை நிரப்பிக் கொள்ளும் படி கூறியுள்ளார்.

பின்னர் அந்த காவலர் அந்த காசோலையை மறுபடியும் அந்த பெண்ணிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அந்த பெண்ணும் உறங்கச் சென்றுவிட்டார். ஆனால் நள்ளிரவில் மது அருந்திவிட்டு வீட்டில் வந்த காவலர் தனது பணத்தை இப்பொழுதே கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். காலையில் தருவதாக அந்த பெண் கூறியும் அவர் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து நான் ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உறங்கிக் கொள்கிறேன் என்று தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். தன்னை தூங்க விடவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் உடனே காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த காவலரை கைது செய்துள்ளனர். பிறகு  சில மணி நேரத்திலேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Categories

Tech |