பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது குவாரிகள் அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் தூசிகள் குடிநீரில் கலக்கின்றன. இதனால் தூசி படிந்த குடிநீரையே குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.