வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு விடியலையும் நல்ல மாற்றத்தையும் தரும் என பெரம்பலூர் நாடாளுமன்றம் டாக்டர் பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மற்றும் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.
அப்பொழுது பயிர் கடன் தள்ளுபடி குறித்து தூண்டியும் செய்யாமல் இருப்பது தவறு என்றார். இதை தூண்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்த அவர், இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும். நல்ல மாற்றத்தை தரும் எனக் கூறினார். மேலும், இந்த சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கு நல்ல பல திட்டங்களை கொடுக்கும் வகையில் இங்கு அரசியல் மாற்றம் நடந்தே தீரும் என்பது நான் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து இருக்கிறார் என கூறினார்.