தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை சுற்றுலா துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருக்கும் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் சுற்றுலாத்துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத் துறை இயக்குனர் சந்திரமோகன்சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அங்கே கடல் சாகச விளையாட்டு நடத்துவதற்கான மைதானங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இதையடுத்து அங்கு கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேற்று துறைமுக கடற்கரை பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.