தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று பேசியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆட்சியர் தலைமையிலான வீரர்களுக்கு செஸ் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியுள்ளதாவது, மாணவர்களாகிய நீங்கள் ஆர்வம் இருப்பதை படிக்கலாம், விளையாடலாம்.
படிப்பாக இருந்தாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஞாபக சக்தி, திட்டமிடுதல் ஆகிய பல்வேறு வகையான திறமைகளையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும். ஆகையால் செஸ் விளையாடுங்கள். தெரியவிட்டால் கற்றுக் கொள்ளுங்கள். நாம் எங்கே இருந்தாலும் சாதிக்க முடியும். மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளில் நீங்கள் சாதிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.