Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் எடுத்து விசாரித்து வந்தனர். பல கட்ட விசாரணைகள் நடத்த இடைக்கால அறிக்கையை கடந்த 14ஆம் தேதி தமிழக அரசிடம் விசாரணை ஆணையம் தாக்கல் செய்தது.

அதன் பிறகு தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.

மேலும் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிர் இழந்ததால், அவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இன்றைய நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.

Categories

Tech |