Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில்… திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து… போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல், தூத்துக்குடி வடக்கு மண்டலம், ஏரல் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து வடக்கு மண்டலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மண்டலா தலைவர் கனகராஜ் தலைமை தங்கியுள்ளார். தெற்கு மண்டலம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் பிரபு மற்றும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து ஏரல் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வீரமணி தலைமை வகித்துள்ளார். அதில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, அமைப்புசாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் முத்துமாலை, ஓ.பி.சி பிரிவு மாவட்ட செயலாளர் மாரிமுத்து பங்கேற்றனர். மேலும் ஆத்தூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய தலைவர் திலக்சந்திரன் தலைமை தங்கியுள்ளார். அதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் தில்லையோகானந்தா, மாவட்ட துணைத்தலைவர் முத்துலட்சுமி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய பார்வையாளர் நடராஜன் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |