நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 ஆண்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
2 மற்றும் 4வது யூனிட் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.