தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மருந்து வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.