தூத்துக்குடி சில்லாநத்தம் பிரதான சாலையில் வேன் – தண்ணீர் லாரி மோதி கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையெல்லாம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வேன்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம்.
அதன்படி, இன்று காலை, பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, சில்லாநத்தம் பிரதான சாலையில் திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதியது.. இதில் வேன் உருக்குலைந்து போனது.. இந்த பயங்கர விபத்தில் மணிமேகலை, காமாட்சி, செல்வராணி சந்தான லெட்சுமி ஆகிய 4 பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்..
மேலும் டிரைவர் உள்ளிட்ட 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த கோர விபத்து சில்லாநத்தம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..