Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம்…. “உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள்”….!!!!!

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் தொடக்கப் பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். இதில் பயிற்சி பெற்ற  மாணவ-மாணவிகளுக்கு வண்ண பட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வீர தமிழன் போர்களை சிலம்பக்கூட செயலாளரும் தலைமை ஆசானமான சுடலைமணி, பயிற்சியாளர் வெள்ளைய ராஜா உள்ளிட்டோர் தலைமை ஏற்று சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். மேலும் இம்முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் நாளை தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்மனூரில் நடைபெற இருக்கும் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார்கள்.

Categories

Tech |