தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராகவுள்ள நிலையில், அதை ரூபாய் 380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி டூ பெங்களூரு இடையே வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் தினமும் விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி டூ நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் ஆய்வு பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும் 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.