Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை….. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விசாரணை ஆணைய அறிக்கை நான்கு தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று கூறிய அமைச்சர் ரகுபதி அலுவலர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களுடன் கூடிய ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |