Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சங்க வருட சந்தா”…. குறைத்து தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் சங்க வருட சந்தாவை குறைக்க செயற்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை திருமண்டல பேராயுருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமை தாங்க திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், செயலர், பொருளாளர் என பலர் பங்கேற்று முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் சங்க வருடம் சந்தாவை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதன்பின் சங்க வருட சந்தா 300 ஆக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுவதாகவும் திருமண்டலத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மேல்நிலை, உயர்நிலை, சிறப்பு பள்ளிகளின் மேலாளர்கள், சபை மன்ற தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், குருவானவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |