Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பள்ளி வாகன பரிசோதனை, மே மாதம் 7 -ம் தேதி என அறிவிப்பு  !!

தூத்துக்குடியில்  உள்ள பள்ளி வாகன பரிசோதனை  மே மாதம் 7 -ம் தேதி  நடைபெறவுள்ளது. 
தூத்துக்குடி வட்டாரத்தில் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், கூறுகையில்   மாணவமாணவிகள் மற்றும்  குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆண்டு தோறும் வாகனங்களின் இயக்கத் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய படம்
அதேபோல் , இந்தாண்டு  பள்ளி வாகனங்களுக்கான தரம் குறித்த ஆய்வு மே 7 ம் தேதி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் முன்னிலையில்  நடைபெறவுள்ளது.  ஆய்வின்போது  குறைபாடுகள் கண்டறியப்பட்டால், நிவர்த்தி செய்யப்பட்டு, மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தார் .

Categories

Tech |