Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை…. எம்பி கனிமொழி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு….!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது. அதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகரன், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்குள்ள 2500-க்கும் அதிகமான குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவதிப்பட்டனர்.

இதையடுத்து பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன் புரத்தில் உள்ள 4 தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அமுதா நகர், சிதம்பர நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்த கனமழையால் புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்தது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் எட்டையபுரம், கழுகுமலை, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் நோயாளிகளைப் பார்க்க உறவினர்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் மருத்துவர்கள், நர்ஸ்கள் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதானது.

இதையடுத்து கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12 மணிக்கும் இரவு 8 மணிக்கு செல்லவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று 3:20 க்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதையடுத்து திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் வரண்டியவேல் தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர்.

Categories

Tech |