தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 9-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி கொண்டாடப்படுகின்றது. அன்று தமிழக முழுவதும் மது விற்பனை செய்ய தடை செய்யப்படும். ஆகையால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மிலாடி நபியன்று மது விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திச் செல்லுதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை கண்டறியப்பட்டால் உரியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.