Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளம்”…. அமைப்பதற்கான நடவடிக்கைகள்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக கடல் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது.

இதனால் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளானது தொடங்கப்பட்டிருக்கின்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க பல கோரிக்கைகள் வந்ததன்படி முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் விரைவில் பீச் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |