Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மற்றும் மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் மூன்று நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி மைசூர் மற்றும் தூத்துக்குடி சிறப்பு கட்டண வகையில் வருகின்ற நவம்பர் 4, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரிலிருந்து மதியம் 12.5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி மற்றும் மைசூரி சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 5, 12,19ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த சிறப்பு கட்டண ரயில்கள் ஏலியூர், மாண்டியா, பெங்களூரு, பெங்களூர் காண்டோமென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், திண்டுக்கல், நாமக்கல், கரூர், மதுரை,விருதுநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி, மூன்று குளிர்சாதனம் மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |