Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி: 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி…. தொடங்கிய மின் உற்பத்தி…..!!!!!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு கப்பல் வாயிலாக 60,000 மெட்ரிக்டன் நிலக்கரி வந்ததை அடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின்உற்பத்தி துவங்கி இருக்கிறது. 

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டது. 2 மற்றும் 4வது யூனிட் மட்டும் இயங்கி வந்தது. இதன் காரணமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கப்பல் வாயிலாக 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததை அடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடுசெய்ய மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |