Categories
தேசிய செய்திகள்

தூய்மை இந்தியா விருது… பெருமை சேர்த்த திருநெல்வேலி… மத்திய மந்திரி…!!!

இந்த வருடத்திற்கான தூய்மை இந்தியா திட்ட விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் காணொளி காட்சி மூலமாக வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டத்தை குறித்த விழிப்புணர்வுகளை பிரதமர், முதலமைச்சர்கள், எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகிய அனைவரும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான தூய்மை இந்தியா விருதுகள் இன்று காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் விருதுகளை வழங்கியுள்ளார். மாநில அளவில் குஜராத் மாநிலத்திற்கு ம்,மாவட்ட அளவில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அளவில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜெயின் மாவட்டம் கச்ராடு தாலுக்காவிற்கும், கிராம பஞ்சாயத்து அளவில் தமிழகத்தில் உள்ள சின்னனூர் என்ற கிராமத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |