இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு ஆளான மக்கள் கடந்த ஒன்பதாம் தேதி மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவர்கள் அங்கே சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். எனினும் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். அதே நேரம் அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்து இருந்த போராட்டக்காரர்கள் ஒரு சிலர் தொடர்ந்து அங்கே தங்கி இருந்தனர். ஆனால் அவர்களை ராணுவம் சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளது.
மேலும் அலுவலகம் அருகே போடப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரமும் பிரித்து எறியப்பட்டுள்ளது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் கவலையும் கண்டனத்தையும் வெளியிட்டு இருந்தன. ஆனால் இதனை பார்த்த ரணில் விக்ரமசிங்கே நிராகரித்துள்ளார்.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அதிபர் அலுவலகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் அங்கு சேதுமடைந்த பொருட்களின் விவரங்களை தடவியில் நிபுணர்கள் சேகரித்துள்ளனர். அதன்பின் தங்கள் தூய்மை பணிகள் அனைத்தும் மேற்கொண்டு அலுவலகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அலுவலகம் இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு திறக்கப்படுகின்றது. இதனைப் போலவே போராட்டக்காரர்கள் வசம் சென்ற பிற அலுவலக கட்டிடங்களை சமூக செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.