தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தூய்மையே மிக முக்கியம். அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் சுத்தம் செய்வதற்கு ‘clean thousand lights campaign’ என்ற திட்டத்தை தொகுதியின் எம்எல்ஏ எழிலன் முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் தூய்மையாகும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ எழிலன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை ரீட்வீட் செய்த இயக்குனர் நவீன், தூய்மைப் பணியாளர் களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லாததை சுட்டிக் காட்டினார். இதையடுத்து ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் கொடுத்ததோடு இயக்குனர் நவீனுக்கு நன்றி தெரிவித்தார்.