கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும் இரவு பகல் பாராமல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில், விஜய் ரசிகர்கள் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் கையுறை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள்,காய்கறி என் அனைத்தையும் வழங்கினர்.
இது மட்டுமில்லாமல் அவர்கள் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரமும் வழங்கினார்கள்.மக்களின் நலனுக்காக தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் இவர்களுக்கு உதவிகள் பல செய்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.