Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை…. ஆணையர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

தூய்மை பணியாளர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் பொருளாதாரம் மேம்பட்டு கழகமானது அமைக்கப்பட வேண்டும். 

நெல்லையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்  தலைவர் வெங்கடேசன், அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டு அதற்கான மனுக்களை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் சார்பாக தமிழகத்தில் 5 நாள் பயணமாக ஆய்வு நடத்தி வருகின்றோம்.

இதை அடுத்து நேற்று முன்தினம் கன்னியாகுமரியிலும்,நேற்று நெல்லையிலும் இந்த ஆய்வானது நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து வகை துப்புரவு தொழிலாளர்களுக்கும் ஒரே சம்பளம் என்ற முறையில் நிர்ணயம் செய்ய, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம், இஎஸ்ஐ,  வைப்பு நிதி ஆகியவை  சரியாக கிடைக்க முடியாத நிலையில், தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை நியமிப்பது முழுவதுமாக ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து ஒப்பந்தத்தினை பணியாளர்கள் உரை குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு மாநில அளவிலான ஆணையமானது 9 மாநிலங்களில் இயங்கி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் மாநில அளவிலான துப்புறவு பணியாளர் ஆணையத்தை அமைக்க வேண்டும் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை அடுத்து தூய்மை பணியாளர்களுக்கான நலவாரியமானது தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் துப்புரவு பணியாளர்களுக்கான 3 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும்,  தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் வரை இழப்பீடு தொகையாக துப்புரவு பணியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |