தூய சகாய மாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற செக்காலை தூய சகாய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வியாழனில் திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று புனித வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்குச்சந்தை எட்வின்ராயன், மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் பிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சியில் பங்குத்தந்தை எட்வின்ராயன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாதங்களை கழுவி புனித வியாழன் பற்றி சிறப்புரை ஆற்றியுள்ளார். இந்த விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.