தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மராட்டியத்தில் உள்ள தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராட்சி உறுதி செய்துள்ளது.
இதனையடுத்து அந்த நபரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் புதிய வகையான கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய குடும்பத்தினரின் பிற நபர்களிடம் இன்று பரிசோதனைகள் சேகரிக்கப்பட உள்ளன.