தென்னாப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அந்தந்த நாட்டை சேர்ந்த அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது டெல்டா பிளஸ் என்ற மூன்றாம் வகை தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.
அந்த வகையில் தென்னாபிரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் 28ஆம் தேதி 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் விரிவுபடுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.