தென் ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் சென்ற திங்கட்கிழமையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கனமழையால் சாலைகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், மின் கம்பங்கள் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறியதாவது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்படவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சாலைகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வரும் தினங்களில் மாகாணத்தின் சில பகுதிகளில் கூடுதலான மழை பெய்யகூடும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் முதல் கடற்கரை பகுதியிலிருந்து பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்று வேகமுடன் வீசகூடும். அதனை தொடர்ந்து பரவலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும் பெய்யகூடும் என்று தெரிவித்துள்ளார்.