Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்கா: வெளுத்து வாங்கிய மழை…. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு….!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு முதல் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள குவாஹுலு-நடல் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |