Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல்… 144 தடை உத்தரவு அமல்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..!!!!

தென்காசி மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் இருபதாம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251 வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நெற்கட்டும் சேவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

அதனால் கொரோனா நோய் தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |