தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. இதன்படி ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த ஒன்றாம் தேதி 2 பாலிஸ்ட் ஏவுகணை ஏவி வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பல கன்னடம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்கள் அனுப்பியது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி தென் கொரிய ராணுவம் பேசும்போது பரஸ்பர எல்லை பகுதி அருகே வடகொரியா 84 விமானங்கள் மற்றும் 4 குண்டுவெடிப்பு நிகழ்த்தும் விமானங்கள் என 12 போர் விமானங்களை அனுப்பியுள்ளது. வானில் இருந்து தரையை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வடகொரிய விமானங்கள் நடத்தப்படும் என நம்பப்படுகிறது. அதனால் அதற்கு பதிலடி தரும் விதமாக எங்களது 30 போர் விமானங்களை எல்லையை ஓட்டிய பகுதிக்கு அனுப்பி இருக்கிறோம் என கூறியுள்ளது.
மேலும் வடகொரியாவின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக உறுதியான நடவடிக்கையின் ஒரு முயற்சியாகவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டது என தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. இதே போல் வடகொரியா இன்று கிழக்கு கடல் பகுதிகளில் குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணையும் சோதனை மேற்கொண்டுள்ளது. எனினும் இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதாரம் மண்டல பகுதியை அடையவில்லை ஜப்பான் ராணுவ மந்திரி யசுகாஜூ ஹாமாடா உறுதிப்படுத்தி உள்ளனர்.