தென்கொரியாவில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தென்கொரியா நவீன தொழில் நுட்பங்களில் முன்னேறிய நாடாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சிறிய அளவிலான நவீன ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சியோலில் உள்ள 300 நர்சரி மற்றும் மழலையர் கல்வி கூடங்களில் இந்த குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆல்ஃபா மினி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் 25 சென்டி மீட்டர் உயரமுள்ளதாக காணப்படுகிறது.
இவை குழந்தைகளுக்கு ஆடல், பாடல் மற்றும் கும்பூ உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கின்றன. இந்த குட்டி ரோபோக்களின் தலையில் ஒரு சிறிய அளவிலான கேமராவும் உள்ளது. இந்த கேமரா குழந்தைகளின் நடவடிக்கையை படமெடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கிறது. இந்த ரோபோக்கள் குறித்து நர்சரி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இந்த ரோபோக்கள் குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு உறுதுணையாக இருக்கின்றன என கூறியுள்ளார். குறிப்பாக இந்த ரோபோக்கள் 4 முதல் 5 வயது குழந்தைகளின் வகுப்பறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது.